Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
அதிகாரம் 120- தனிப்படர்மிகுதி - Coggle Diagram
அதிகாரம் 120- தனிப்படர்மிகுதி
தாம் விரும்புபவராலேயே விரும்பப்படும் பெண்கள் பெருகிற காதல் இன்பம் எதுபோன்றது?
விதை இல்லாத கனியைப் போன்றது. 1191
உயிர்வாழ்பவருக்கு, வானம் மழை பெய்து உதவினாற் போன்றது. 1192
துன்பத்தை விளைவிக்கும் ஒருதலைகாதல் எப்போது இனிமையாகும்?
இருதலை காதலாக அது மாறும்போது. 1196
காதலர் ஒருவரிடத்தில் மட்டும் காமன் ஒன்றிருப்பதால் ஏற்படும் விளைவு யாது?
துன்பமும் வருத்தமும் ஏற்படும். 1197
கல் நெஞ்சம் கொண்டு பெண்கள் வாழ்வது ஏன்?
விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் கேளாமல் வாழ்வதால். 1198
எது கடலைத் தூர்ப்பதைக் காட்டிலும் கடினமானது?
அன்பு இல்லாதவரிடம், துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவது. 1200
அன்புகுரியவர் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும் எதுவெல்லாம் அவரின் துணைக்கு இன்பமாகும்?
அவரைப் பற்றிய புகழ் உரையும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். 1199
பிரிவுத் துன்பம் வந்தாலும் காதலிக்கும் பெண் எவ்வித செருக்கோடு இருக்க வேண்டும்?
‘மீண்டும் நாங்கள் இன்பமாக வாழ்வோம்’ என்னும் செருக்கோடு இருக்க வேண்டும்.1193
காதலர் காதலிப்பவருக்குச் செய்யகூடிய நன்மை யாது?
அவரும் அவ்வாறே காதல் கொள்வது. 1195
யார் ஒருவர் நல்வினை பொருந்தியவர் அல்லர்?
தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாமல் இருப்பவர். 1194